முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், வக்கீல் தொழிலில் 50 ஆண்டுகள் நிறைவு
வக்கீல் தொழிலில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனுக்கு சென்னை ஐகோர்ட்டில் பாராட்டு விழா நடந்தது. அப்போது அவருக்கு வக்கீல்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை,
தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலில் 1968-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந்தேதி வக்கீலாக தனது பெயரை பதிவு செய்தார். அவர், ஆளவந்தார் கொலை வழக்கில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீலாக இருந்த ஜே.எஸ்.அதனேஷியஸிடம் ஜூனியர் வக்கீலாக பணியாற்றினார். மேலும் தலைமை அரசு குற்றவியல் வக்கீல்களாக இருந்த பி.ஆர்.கோகுலகிருஷ்ணன், வி.ராமசாமி உள்ளிட்டோரிடமும் ஜூனியராக பணியாற்றி இருக்கிறார்.
பி.எச்.பாண்டியன் எம்.ஏ. குற்றவியல் மற்றும் சட்ட விஞ்ஞான படிப்பும், எம்.எல். கிரிமினல் சட்ட படிப்பும் முடித்துள்ளார். சட்ட படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றார். வக்கீலாக 50 ஆண்டுகள் திறம்பட பணியாற்றியவர். பல பொதுநல மற்றும் கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி வெற்றி பெற்றிருக்கிறார்.
அ.தி.மு.க.வை, எம்.ஜி.ஆர். தொடங்கிய சமயத்தில் அவர் மீதான பற்றின் காரணமாக பி.எச்.பாண்டியன் அக்கட்சியில் இணைந்தார். கட்சியின் வக்கீல் பிரிவு செயலாளராக பணியாற்றினார். எம்.எல்.ஏ., எம்.பி., சட்டசபை துணை சபாநாயகர், சபாநாயகர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
சட்டசபையில் அவர் அளித்த மகத்தான தீர்ப்புகள் இன்றைய அளவிலும் பல்வேறு மாநில சட்டசபைகளில் மேற்கோள் காட்டப்பட்டு வருகிறது. அரசியல் சட்டத்தை தி.மு.க.வினர் எரித்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு வரை வெற்றி தேடி தந்த சிறப்பு இவருடைய தீர்ப்புக்கு உண்டு. சட்டசபை சபாநாயகர் பதவி வானளாவிய அதிகாரம் உடையது என்பதை இந்தியா முழுமைக்கும் பறைசாற்றியவர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ.வாகவும், நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் ஒரு முறை எம்.பி.யாகவும் வெற்றி பெற்றுள்ளார்.
வக்கீல் தொழிலில் 50 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு செய்த பி.எச்.பாண்டியனுக்கு, சென்னை ஐகோர்ட்டில் உள்ள ‘மெட்ராஸ் பார் அசோசியேஷன்’ வக்கீல்கள் சங்கத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற மூத்த வக்கீல்கள் பலர், பி.எச்.பாண்டியனுக்கு மாலை, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பாராட்டு விழாவில் மூத்த வக்கீல் தியாகராஜன் பேசும்போது, “பி.எச்.பாண்டியன் சிறந்த வக்கீல் மட்டுமல்லாமல், சபாநாயகராகவும் சிறப்பாக பணியாற்றியவர். சபாநாயகர் அதிகாரம் என்ன? என்பதை உலகுக்கு எடுத்து சொன்னவர். அது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படாது என்பதையும் உணர செய்தவர். ஆனால், இன்று எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. ஐகோர்ட்டு அனுப்பும் நோட்டீசை பெற்றுக்கொண்டு சாதாரணமாக இருக்கிறார்கள்” என்றார்.
மூத்த வக்கீல் சதீஷ் பராசரன் பேசுகையில், “பி.எச்.பாண்டியன் வக்கீல் தொழிலில் மேலும் 50 ஆண்டுகள் இருந்து, எங்களை வழிநடத்த வேண்டும்”, என்றார்.
இதேபோல வக்கீல்கள் ஜி.மாசிலாமணி, சண்முக வேலாயுதம், முத்துசாமி, பி.வில்சன், காட்சன் சாமிநாதன், புண்ணியகோடி, கோபிநாத் ஆகியோரும் வாழ்த்தி பேசினார்கள்.