அனைத்துக்கட்சி தலைவர்களை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

அனைத்துக்கட்சி தலைவர்களை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். #MKstalin #PMmodi

Update: 2018-04-17 06:46 GMT
சென்னை,

 காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஸ்கீம் (திட்டம்) குறித்து விளக்கம் கோரிய மத்திய அரசின் மனுவை திரும்பப்பெற வேண்டும்.

மே 3-ல் வழக்கு விசாரணைக்கு வரும் வரை காத்திருக்காமல் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் செயலாளரை, பிரதமர் கண்டிக்க வேண்டும் எனவும் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் செய்திகள்