புதுச்சேரியில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது; 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
புதுச்சேரியில் மீன்பிடி தடை காலம் தொடங்கிய நிலையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. #PuducherryFishermen
புதுச்சேரி,
கடலில் வாழும் மீன்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் இனவிருத்தி செய்யும் காலத்தில் கடலில் மீன் பிடிப்பது அவற்றின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். அதனால் அந்த காலத்தில் கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படும்.
இந்த மீன்பிடி தடை காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்த மீன்பிடி தடை காலம் ஜூன் 14ந்தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கும். மீன்பிடி தடை காலம் தொடங்கியுள்ள நிலையில் கடலில் இருந்து கிடைக்கும் உணவு பொருட்களின் விலை உயரும் என கூறப்படுகிறது.