எதிர்ப்பை பார்த்து இனியாவது விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுங்கள் பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் டுவிட்
எதிர்ப்பை பார்த்து இனியாவது விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுங்கள் என பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் டுவிட் செய்து உள்ளார். #CauveryManagementBoard #PMModi #MKStalin
சென்னை,
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி இன்று சென்னை வரும்போது அவருக்கு கருப்புக்கொடி காட்டப்படும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி எதிர்க்கட்சிகள் சார்பில் விமான நிலையத்தில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டரில், எதிர்ப்பை பார்த்து இனியாவது விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுங்கள் என பிரதமர் மோடிக்கு டுவிட் செய்து உள்ளார்.
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களே! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து இன்று, தமிழ்நாடு முழுவதும் மக்கள் தங்கள் இல்லங்களில் கருப்புக் கொடியேற்றியும், கருப்புடையணிந்தும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இனியாவது, விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்! விமானத்தில் மேலே மட்டும் பறக்கும் நீங்கள், கீழே எங்கள் உணர்வுகளின் அடையாளமாய் கருப்புக் கொடி அசைவதை பாருங்கள், உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கை திரும்ப பெறுங்கள். இல்லையேல், கருப்பு என்கிற நெருப்பு அணையாது! என மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் தகவல் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களே!#CauveryManagementBoard அமைக்காததை கண்டித்து இன்று, தமிழ்நாடு முழுவதும் மக்கள் தங்கள் இல்லங்களின் கருப்புக் கொடியேற்றியும், கருப்புடையணிந்தும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இனியாவது, விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்! pic.twitter.com/wzrBMCZdzi
— M.K.Stalin (@mkstalin) April 12, 2018