காஞ்சிபுரம் : மதுராந்தகம் அருகே மினி லாரி மீது லாரி மோதல் - 2 பேர் பலி

காஞ்சிபுரத்தில் மதுராந்தகம் அருகே மினி லாரி மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியாயினர். #Madhuranthagam #LorryAccident

Update: 2018-04-12 02:57 GMT
காஞ்சிபுரம்,

காஞ்சிபுரத்தில் மதுராந்தகம் அருகே மினி லாரி மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியாயினர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

மதுராந்தகம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி எதிர்பாராத விதமாக சாலை தடுப்பு சுவரை தாண்டி எதிரே வந்த மினி லாரி மீது நேருக்கு நேர் மோதி்யது. இதில் மினி லாரி ஓட்டுநர் உட்பட 2 பேர் பலியாயினர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்