ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய 780 பேர் கைது: காவல்துறை தகவல்

ஐபிஎல் போட்டிக்கு எதிராக சென்னை அண்ணாசாலை மற்றும் சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 780 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

Update: 2018-04-10 16:12 GMT
சென்னை, 

காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில்  நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. 

 இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நாம்தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை, விடுதலை சிறுத்தைகள்  உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. சென்னை அண்ணா சாலையில் போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களில் 780 பேரை கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 
மனிதநேய ஜனநாயக கட்சி 125, தமிழக வாழ்வுரிமை கட்சி 75, விடுதலை சிறுத்தைகள் - 63, ரஜினி மக்கள் மன்றம் - 53, தமிழர் எழுச்சி இயக்கம் - 32  உட்பட 780 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும்  எழும்பூர் ராஜராத்தினம், பெரியமேடு  கண்ணப்பர் திடல், நுங்கம்பாக்கம் ஏபிவிபி மண்டபம், ராயப்பேட்டை முத்தையா மண்டபம் உள்ளிட்டவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்