மாமல்லபுரத்தில், ராணுவ கண்காட்சியையொட்டி முப்படைகளின் சாகச ஒத்திகை
மாமல்லபுரத்தில் ராணுவ கண்காட்சியையொட்டி முப்படைகளின் சாகச ஒத்திகையை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.
சென்னை,
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் 10-வது ‘டெபெக்ஸ்போ-2018’ என்னும் சர்வதேச ராணுவ கண்காட்சி சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் வருகிற 11-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.
இதை முறைப்படி வருகிற 12-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த கண்காட்சிக்காக திருவிடந்தையில் 2 லட்சத்து 90 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.
ராணுவ கண்காட்சியையொட்டி திருவிடந்தை கடற்கரையில் முப்படை வீரர்களின் சாகச ஒத்திகை, அணிவகுப்பு நேற்று நடந்தது. இந்த ஒத்திகையை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் ராணுவ உற்பத்தி துறை செயலாளர் அஜய்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
ஒத்திகையின் ஒரு பகுதியாக 6 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த டார்னியர் விமானத்தில் இருந்து விமானப்படை வீரர்கள் 6 பேர் பாராசூட் உதவியுடன் குதித்து தரையிறங்கினர். தொடர்ந்து கடலில் நிறுத்தப்பட்டு இருந்த போர் கப்பல்கள் இலக்குகளை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு சாகச நிகழ்ச்சிகளை வீரர்கள் செய்து காண்பித்தனர்.
இதேபோல் கடல் மணல்பரப்பில் நிறுத்தப்பட்டு இருந்த நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பீரங்கி வண்டிகள் மூலம் அதிவேகமாக சென்று எதிரிகளை வீழ்த்தும் சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்து மெய்சிலிர்க்க வைத்தனர். பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறு நேரடி ஒளிபரப்பு மூலம் இந்த சாகச ஒத்திகை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
பின்னர் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நவீன ரக போர்க்கருவிகளை அனைவரும் பார்வையிட இது ஒரு வாய்ப்பாக அமையும். இங்கு சாகசம் செய்து காண்பித்த பீரங்கி வண்டிகளின் உதவியால் ஆற்றின் குறுக்கே 10 நிமிடத்தில் 20 மீட்டர் நீள பாலத்தை அமைத்துவிட முடியும்.
தற்போது ராணுவத்தில் போர்க்கப்பல், ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கி கப்பல்கள், போர் விமானங்களுக்கு தேவையான உதிரிபாகங்களை நாம் தயாரித்து வருகிறோம்.
துப்பாக்கிகள் தயாரிக்கும்போது அவற்றின் சோதனைக்காக வெளிநாடுகளை சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது. வரும் காலங்களில் அதுபோல் இல்லாமல் இந்த துறையிலும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பயிற்சி அளித்து உற்பத்தி திறன் மேம்படுத்தப்படும். இதில் 50 சதவீத சலுகைகள் குறு, சிறு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
கோவையில் ரூ.20 கோடியில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கப்பட இருக்கிறது.
சென்னை துறைமுகத்தில் வருகிற 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கடற்படை போர்க் கப்பல்களை பொதுமக்கள் பார்வையிட காலை 9 மணி முதல் மாலை 5 வரை நாளொன்றுக்கு 4,500 பேர் வீதம் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். 6 பஸ்களில் 30 பார்வையாளர்கள் வீதம் அழைத்து செல்லப்படுவார்கள். பார்வையாளர்கள் அடையாள அட்டை மற்றும் அதன் ஜெராக்ஸ் பிரதி ஒன்றை எடுத்துக்கொண்டு தீவுத் திடலுக்கு வரவேண்டும்.
அதேபோல் 13 மற்றும் 14-ந் தேதிகளில் பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்திலும் பொதுமக்கள் பார்வை யிட அனுமதிக்கப்படுகின்றனர். பார்வையாளர்கள் www.defexpoindia.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யவேண்டும். கண்காட்சி நடக்கும் 4 நாட்களும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதி வண்ண விளக்குகளால் கண்ணை கவரும் வகையில் காட்சி அளிக்கும். தமிழ் புத்தாண்டில் பொதுமக்கள் அரிய காட்சிகளை காணமுடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராணுவ உற்பத்தி துறை செயலாளர் அஜய்குமார் நிருபர்களிடம் கூறுகையில், “இந்த கண்காட்சியில் நமது நாட்டு நிறுவனங்கள் 539, வெளிநாட்டு நிறுவனங்கள் 162 உள்பட 701 நிறுவனங்கள் ராணுவ தளவாட பொருட்களை காட்சிப்படுத்துகின்றன. இதில் 72 சதவீதம் இந்திய நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, சுவீடன், பிரான்ஸ் உள்ளிட்ட 47 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். இந்த கண்காட்சி மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்றார்.
ராணுவ உற்பத்தி துறை கூடுதல் செயலாளர் சுபாஷ் சந்திரா, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, தமிழக தொழில்துறை செயலாளர் ஞானதேசிகன், இணை-செயலாளர் சண்முகம் மற்றும் ரமேஷ் சந்த் மீனா, செய்தித்துறை இயக்குனர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு முப்படைகளின் சாகச ஒத்திகையை பார்வையிட்டனர். முன்னதாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.