காவிரி மேலாண்மை வாரியம்: குரலை அழுத்தமாக பதிவு செய்த நடிகர் ரஜினிகாந்த்திற்கு வாழ்த்துகள் அமீர்

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பாக தனது குரலை அழுத்தமாக பதிவு செய்த நடிகர் ரஜினிகாந்த்திற்கு வாழ்த்துகள் என அமீர் கூறியுள்ளார். #Rajinikanth #ameer

Update: 2018-04-08 09:28 GMT
சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். அவரது கருத்திற்கு இயக்குனர் அமீர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திடவும், துணைவேந்தர் நியமனத்தை மறு பரிசீலனை செய்யவும், ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடவும், ஐபிஎல்- ஐ தவிர்க்கவும் தனது குரலை அழுத்தமாக பதிவு செய்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்