சென்னையில், 12-ந்தேதி விவசாயிகள் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில், 12-ந்தேதி விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் த.குருசாமி, தமிழக விவசாய சங்கத்தை சேர்ந்த கே.செல்லமுத்து ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலை மத்திய அரசு செய்து வருகிறது. எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 12-ந்தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். இதில் 15-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளன.
உண்ணாவிரதத்தில் 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். விவசாய கடன்களை ரத்து செய்யவேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை உடனே வழங்கவேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம், கெயில் குழாய் பதிக்கும் திட்டம், விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கும் விவசாய விரோத திட்டங்களை கைவிட வேண்டும் என்ற எங்களுடைய பிற கோரிக்கைகளையும் போராட்டத்தில் நாங்கள் முன் வைக்க உள்ளோம்.
உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர்கள், மாணவர் அமைப்புகள், கலைத்துறையினர் உள்பட அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தை திசை திருப்பும் முயற்சியாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வேறு மாநிலத்தை சேர்ந்தவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
தற்போதைய சூழ்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தமிழகத்தில் நடத்தக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அடுத்தகட்டமாக மனிதசங்கிலி, ஊர்வலம், கண்டன பேரணி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின்போது, தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.விஸ்வநாதன், இந்திய விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஜி.எஸ்.தனபதி உள்பட விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு எதிராக தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மதியம் புகார் மனு அளித்தனர். அதில், ‘தமிழகத்தில் தற்போது நிலவும் அசாதாரணமான சூழ்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்துவதற்கு அனுமதி வழங்க கூடாது.’ என்று கூறப்பட்டுள்ளது.