2ஜி வழக்கில் தீர்ப்பு: தி.மு.க., காங்கிரஸ் மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைத்தெறியப்பட்டுள்ளது திருநாவுக்கரசர் கருத்து
2ஜி வழக்கின் தீர்ப்பால் தி.மு.க., காங்கிரஸ் மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைத்தெறியப்பட்டுள்ளது என திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னை,
தமிழக இளைஞர் காங்கிரசுக்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவராக ஹசன் ஆரூண், துணை தலைவர்களாக பாக்கியராஜ், பிரபுதாஸ், லெனின்பிரசாத் மற்றும் பொதுச்செயலாளர்கள், 72 மாவட்ட தலைவர்கள் உள்பட 804 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் நேற்று சத்தியமூர்த்தி பவனில் நடந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் அமிர்தசிங் ராஜ பிரான் முன்னிலையில் பதவி ஏற்றனர். விழாவில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் தங்கபாலு, தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2ஜி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், என் சார்பிலும் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 2ஜி வழக்கில் 1.70 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்ததாக ஒரு பொய்யான பிரசாரம் செய்து பா.ஜ.க.வினர் மத்தியில் ஆட்சியை பிடித்தனர். இந்த 2ஜி குற்றச்சாட்டு தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்தப்பட்டது.
தற்போது உண்மை வென்று, குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என அனைவரும் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதன்மூலம் கூட்டணி கட்சியான தி.மு.க.வின் மீதும், காங்கிரஸ் மீதும் சுமத்தப்பட்டிருந்த களங்கம் துடைத்தெறியப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினால் மக்களும், தி.மு.க.வினரும், காங்கிரசாரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி என்பது முன்னதாகவே உறுதி செய்யப்பட்ட ஒன்று. எங்களது கூட்டணி கட்சி வேட்பாளர் மருதுகணேஷ் நிச்சயம் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.