2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தீர்ப்பு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து உள்ளனர்.

Update: 2017-12-21 06:27 GMT
சென்னை

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கபட்டது

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க மாநிலங்களவை எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வந்தடைந்தனர். சுப்பிரமணியன் சுவாமியும் நீதிமன்றம் வந்தடைந்தார். பாட்டியாலா நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. நீதிமன்ற வளாகத்தில் தி.மு.க தொண்டர்களும் குவிந்துள்ளனர். காலை 10.30 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டது.

 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கபட்டது  2 ஜி அலைக்கற்றை முறை கேடு வழக்கில் இருந்து  ஆ.ராசா- கனிமொழி  உள்பட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ, அமலாக்கத்துறை தவறிவிட்டது என நீதி மன்றம் கூறி உள்ளது.

இதனை தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்

இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்  தங்கள் கருத்தை தெரிவித்து உள்ளனர் அதன் விவரம் வருமாறு:-

திமுக எம்.பி. கனிமொழி:-  2ஜி அலைக்கற்றை வழக்கில் நியாயம், நீதி வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரிய அழுத்தம் இருந்த நிலையில் தற்போது நிம்மதி கிடைத்துள்ளது. 2ஜி அலைக்கற்றை வழக்கை பொய் வழக்கு என திமுக கூறி வந்ததற்கு தீர்வு கிடைத்துள்ளது. நீதி வென்றிருக்கிறது, தீர்ப்பு திமுகவிற்கு கிடைத்த பெரிய வெற்றி. 2ஜி வழக்கு அனுமானத்தில் போடப்பட்டது.எந்த ஆதாரமும் இன்றி வழக்கு தொடரப்பட்டது -

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலையானதால் மு.க.ஸ்டாலின் இனிப்பு வழங்கினார்  பின்னர் தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானப்படுத்தி அழிக்க போடப்பட்ட வழக்குதான் 2ஜி .2ஜி வழக்கில் வரலாற்றி சிறப்பு மிக்க தீர்ப்பு வந்துள்ளது.  நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து, திமுக எந்த தவறும் செய்யவில்லை என நிரூபணமாகி உள்ளது.

திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் 

எல்லாமே இனி வெற்றிதான். தவறான அரசியல் உள்நோக்கத்தோடு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது கலங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்று கெட்ட எண்ணத்தில் தொடரப்பட்டது இந்த வழக்கு. எவ்வளவோ சூது, சூழ்ச்சிகளை செய்தார்கள். நீண்ட கால வழக்கு வாதத்திற்குப் பிறகு எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. நியாயம் வென்றுள்ளது. வெற்றிச் சிறகடித்து வெற்றி பெற்றிருக்கிறோம். பொய் வழக்குகளை போட்டு உடைத்திருக்கிறோம். திமுக இனி நிமிர்ந்து நிற்கும். மீண்டும் வெல்லும் என்றார். அத்துடன் ஆர்.கே நகரில்  திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று அவர் கூறினார். 

த.மா.க. தலைவர் ஜி.கே வாசன்  நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது  என கூறினார்.

இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் 

நீதிமன்ற தீர்ப்பு திமுகவிற்கு மேலும் பலத்தை அதிகரிக்கும் . நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. ஊழல், லஞ்சத்தை ஒழிக்க வழிவகை செய்ய வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் ஊழலே  நடைபெறவில்லை என கூறமுடியாது

காங்கிரஸ் செய்தி தொடரபாளர் நடிகை குஷ்பு கூறும் போது  2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்.

 முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்: குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பது, தீர்ப்பின் மூலம் நிரூபணமாகி உள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி:2ஜி வழக்கை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு, தீர்ப்பு ஒரு பாடம்

திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன்: அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொடரப்பட்ட வழக்கில் வென்றுள்ளோம்.

திமுக எம்.பி. திருச்சி சிவா : தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது, திமுக மீது சுமத்தப்பட்ட களங்கம் விலகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர்  திருநாவுக்கரசர்: 2ஜி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

தொல் . திருமாவளவன் :அனைத்து இழப்புகளையும் சரிசெய்யும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது. சிபிஐ நேர்மையாக நடக்க வேண்டும் என வழிகாட்டும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. 

அநீதி வீழும்; அறம் வெல்லும் என்று கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். 

திராவிட கழக தலைவர் கி.வீரமணி :  2ஜி வழக்கின் தீர்ப்பு பொய்மையின் திரையை சுக்கு நூறாக கிழித்தெறிந்த தீர்ப்பு . வாய்மை வென்று உள்ளது என்று நெருப்பாற்றில் நீந்தி திமுக வெளிவந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 

முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில் : அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பழிசுமத்திய பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் .இல்லாத முறைகேட்டை பெரிதுபடுத்தி பாஜக பிரச்சாரம் செய்தது.

கனிமொழியின் தாயார்  ராசாத்தி அம்மாள்: நீதி வென்றுள்ளது, தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீதிமன்ற தீர்ப்பின் மூலம் எனது வேதனை தீர்ந்தது.
என் மகள் விடுதலை ஆனது போல, தற்போதைய ஆட்சியில் இருந்து மக்களும் விடுதலை ஆவார்கள்.

 முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்: தீர்ப்பின் மூலம் ஐ.மு.கூட்டணியை, பிரிக்கும் மிகப்பெரிய பிரசாரம் முறியடிக்கப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசுக்கு எதிரான தீய பரப்புரை முடிவுக்கு வந்துள்ளது.

அமைச்சர் ஓ.எஸ் மணியன் : 2ஜி வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பு நிரந்தரமற்றது  

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: 2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் .

 சசிகலா உறவினர் கிருஷ்ணப்ரியா  : 2ஜி விவகாரம்- ஒரு பெண்ணாக, ஒரு தாயாக திருமதி கனிமொழிக்கு எனது வாழ்த்துகள்.

மேலும் செய்திகள்