தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறும்: காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் பேட்டி

ஆர்.கே. நகர் சட்டசபைக்கான இடைத்தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறும் என காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் பேட்டியளித்துள்ளார்.

Update: 2017-12-21 03:46 GMT

ஆர்.கே. நகர்,

ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.  பொதுமக்கள் காலையிலேயே ஆர்வமுடன் வந்து வாக்கு சாவடிகளுக்கு முன் வரிசையாக நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த வாக்கு பதிவு மாலை 5 மணிவரை நடைபெறும்.  தேர்தலுக்காக 258 வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில், தேர்தல் நடைபெறும் பழைய வண்ணாரப்பேட்டைக்கு காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.  அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், தேர்தலுக்காக 3 ஆயிரத்திற்கும் மேலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  வாக்கு சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் 5 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்