ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியது
ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
ஆர்.கே. நகர்,
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் காலியாக அறிவிக்கப்பட்ட ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்தது.
இந்த நிலையில் வாக்காளர்கள் காலையிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்காக வாக்கு சாவடிகளுக்கு முன் வரிசையாக நின்றனர். இதனை தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.
இன்று நடைபெறும் வாக்கு பதிவினை அடுத்து வாக்கு எண்ணிக்கை வருகிற 24ந்தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.