காவல் அதிகாாி பொியபாண்டி சொந்த நிலத்தை பள்ளிக்கூடத்திற்கு தானமாக வழங்கியவா் கிராம மக்கள் சோகம்
ராஜஸ்தானில் சுட்டு கொல்லப்பட்ட காவல் அதிகாாி பொியபாண்டி தனது சொந்த நிலத்தை பள்ளிக்கூடத்திற்கு தானமாக வழங்கியவா்.
சென்னை
சென்னை, கொளத்தூாில் நகைக்கடை கொள்ளை தொடா்பாக சென்ராம், சங்கர்லால் உள்பட 4 பேரை காவல்துறையினா் கைது செய்திருந்தனா். வழக்கில் முக்கிய குற்றவாளிகளான நாதுராம் மற்றும் தினேஷ் சௌத்ரியை கைது செய்ய 6 போ் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஜெய்பூா் அருகே பாலி மாவட்டத்தில் உள்ள செங்கல்சூளை ஒன்றில் குற்றவாளிகள் பதுங்கியிருந்தனா். அவா்களை பிடிக்க முயன்றபோது கொள்ளையா்களுக்கும், காவல்துறையினருக்குமிடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த தாக்குதலில் காவல் ஆய்வாளா் பொியபாண்டி உயிாிழந்தாா். மேலும், கொளத்தூா் காவல் ஆய்வாளா் முனி சேகா் காயமடைந்தாா்.
பொியபாண்டி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது சொந்த ஊரான சாலைபுதூா் கிராம மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா். ஏனெனில் பொியபாண்டி தனது சொந்த நிலத்தை பள்ளிக்கூடம் ஒன்றிற்கு தானமாக வழங்கியவராம்.
இவரது தந்தை நெல்லை மாவட்டத்தில் பொிய நிலக்கிழாராக வாழ்ந்தவா் என்றும், இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளதாகவும் கிராம மக்கள் தொிவித்துள்ளனா்.
கொள்ளையா்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட பொியபாண்டி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா தேவர்குளம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சாலைபுதூரைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் பெயர் செல்வராஜ். 1969-ம் ஆண்டு பிறந்த இவர் பி.எஸ்.சி. படித்துள்ளார். கடந்த 2000-ம் ஆண்டு இவர் காவல் துறையில் பணியில் சேர்ந்தார். கடந்த 2014-ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார்.
கடந்த அக்டோபர் மாதம் தான் இவர் மதுரவாயல் போலீஸ் நிலையத்திற்கு மாற்றலாகி வந்து பொறுப்பேற்றார். 2 மாதத்திற்குள் நகைக்கடை கொள்ளை விசாரணை அவருக்கு எமனாக மாறி விட்டது. ஆவடி வசந்த் நகரில் உள்ள நேரு தெருவில் வசித்து வந்த அவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார்.