ஆர்.கே.நகர் தொகுதியில் பண மழை:தேர்தல் ஆணையத்துக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அங்கு பண மழை பெய்யத் தொடங்கியுள்ளது. ஓட்டுக்காக மக்களுக்கு பணம் கொடுக்க ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் வகுத்துள்ள திட்டங்கள் குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளைக் காணும்போது ஜனநாயகம் என்ன ஆகுமோ? என்ற ஐயம் எழுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் அதிகாரியாக பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டப் பிறகு விதி மீறல்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதற்கு ஓரளவு பயனும் கிடைத்துள்ளது. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க தமிழக அரசு எந்திரம் எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்காததால் அதைத் தடுக்க முடியவில்லை.
இனிவரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையக் கூடும். ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த இடைத்தேர்தலில் எந்த அளவுக்கு பணம் வினியோகிக்கப்பட்டதோ, அதைவிட அதிக பணம் இப்போது வினியோகிக்கப்படவுள்ளது என்பது தான் மறுக்க முடியாத உண்மை ஆகும்.
கடந்த முறை ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருந்ததால், இந்தமுறை அவர்கள் போட்டியிட்டிருக்க முடியாது. அதுமட்டுமின்றி, இப்போது புதிதாக போட்டியிடுவோருக்கும், ‘ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவோம்’ என்ற அச்சம் இருக்கும் என்பதால் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்த முடியும்.
எந்த ஒரு தொகுதியிலும் ஓட்டுக்காக பணம் கொடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தலை ஒத்திவைக்கவும், பணம் கொடுத்த வேட்பாளரை தகுதிநீக்க வசதியாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய அரசும், தேர்தல் ஆணையமும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.