ஆபாச படங்கள் வெளியீடு கமிஷனர் அலுவலகத்தில் ஜெ.தீபா புகார் மனு
வாட்ஸ்- அப், யுடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் எனது புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
எம்.ஜி.ஆர்-அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா கையெழுத்திட்ட புகார் மனு ஒன்றை அவர் சார்பில் வக்கீல் சுப்பிரமணி நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
வாட்ஸ்- அப், யுடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் எனது புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளது. இது என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கும், தனிப்பட்ட முறையிலும், எனது புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த ‘சைபர் கிரைம்’ போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.