தமிழக காவல்துறை நியாயமாக நடந்துகொள்ள வேண்டும், இல்லையெனில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பேன்-டிடிவி தினகரன்

தமிழக காவல்துறை நியாயமாக நடந்துகொள்ள வேண்டும், இல்லையெனில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பேன் என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

Update: 2017-12-11 08:44 GMT
சென்னை

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்த பின் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தனது ஆதரவாளர்களை காரணமின்றி கைது செய்வது குறித்து புகார் அளித்தேன்  ஆர்.கே.நகரில் எனது ஆதரவாளர்களை காரணமின்றி காவல்துறையினர் கைது செய்கின்றனர். தீவிரவாதிகளை பிடிப்பது போல கைது செய்கின்றனர். நக்சலைட் போல நள்ளிரவில் கைது செய்வதா? காவல்துறையினர் நேர்மையாக செயல்படவில்லை. இதுக்கெல்லாம் பயப்படுற ஆளு நாங்க இல்லை.

உண்மையாகவே தேர்தல் சரியாக நடக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். விரக்தியின் உச்சயில் ஆளுங்கட்சி உள்ளது.

குமரியை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் புயல் நிவாரண பணிகளை அரசு முடுக்கிவிடவும் இல்லை,முடிக்கவும் இல்லை.

தமிழக காவல்துறை நியாயமாக நடந்துகொள்ள வேண்டும், இல்லையெனில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பேன்.

அடுத்த கட்ட தலைவரை ஆர்.கே.நகர் தொகுதிமக்கள் உருவாக்க இருக்கிறார்கள்.

ஆர்.கே நகர் தேர்தலில் நிச்சயம் நாங்கள்  வெற்றி பெறுவோம் இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்