பாரதீய ஜனதா டெபாசிட் கூட வாங்காது என்பது தமிழிசைக்கு தெரியும் மைத்ரேயன் எம்.பி. பதிலடி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா டெபாசிட் கூட வாங்காது என்பது தமிழிசைக்கு தெரியும் என மைத்ரேயன் எம்.பி. பதிலளித்து உள்ளார்.
சென்னை,
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக கரு.நாகராஜன் போட்டியிடுகிறார். சென்னை ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரன் அணியினர் பணப்பட்டுவாடா செய்வதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா சார்பில் போராட்டமும் நடைபெற்றது. ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது; தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருடைய தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிமுக எம்.பி. மைத்ரேயன் பேசுகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக டெபாசிட் கூட வாங்காது என்பது தமிழிசைக்கு தெரியும், ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா என தமிழிசை ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டக்கூடாது என கூறிஉள்ளார்.