வெளிநாடுகளிலும் மீனவர்களை தேட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் ஜெயக்குமார்
வெளிநாடுகளிலும் மீனவர்களை தேட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறிஉள்ளார்.
சென்னை,
‘ஒகி’ புயலில் சிக்கி மாயமான மீனவர்கள் ஏராளமானோர் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர் களை தேடும் பணியில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மாயமான மீனவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி நீடிக்கிறது. இதற்கிடையே, மாயமாகி இன்னும் கரை திரும்பாத மீனவர்களை மீட்க விரைவாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், மீனவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கரை திரும்பாத மீனவர்களை, மீனவர்களின் உதவியுடன் தேடும் பணியில் கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை ஈடுபட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் கரைசேர்ந்த தமிழக மீனவர்களை சொந்த ஊர் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 2015 மீனவர்களின் விபரம் வெளியிடப்பட்டு உள்ளது. மீனவர்கள் அண்டைய மாநிலங்களுக்கு சென்று இருக்கலாம், அம்மாநிலங்களில் இருந்து விபரம் கேட்கப்பட்டு உள்ளது. அண்டைய நாடுகளிலும் மீனவர்களை தேட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக ஐக்கிய அரபு எமிரெட்ஸ் நாடுகளுக்கு மத்திய அரசு வெளியுறவுத்துறை முலம் கடிதம் எழுதி உள்ளது.
கடைசி மீனவரை கரைசேர்க்கும் வரையில் அவர்களை தேடும் பணியானது தீவிரமாக நடைபெறும் என கூறிஉள்ளார்.