தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பா.ஜ.க.வினர் சாலைமறியல்
சென்னை ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரன் அணியினர் பணப்பட்டுவாடா செய்வதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினர்.
சென்னை,
சென்னை ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரன் அணியினர் பணப்பட்டுவாடா செய்வதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினர். மேலும் இதனை கண்டித்து அவரது தலைமையில் பா.ஜ.க.வினர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக கரு.நாகராஜன் போட்டியிடுகிறார். நேற்று அவர் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் செரியன் நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தகவல் கிடைத்தது. இதனால் ஆவேசமடைந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வேட்பாளர் கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் தங்களுடைய பிரசாரத்தை நிறுத்தினர்.
அவர்கள் மதியம் 12.20 மணியளவில் புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘மெட்ரோ ரெயில்’ பணியால் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி திண்டாடும், அப்பகுதி ஸ்தம்பித்து போனது. 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
பா.ஜ.க.வினரின் சாலைமறியல் போராட்டம் குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் போலீசாரின் சமரசத்தை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்தநிலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த பெண் ஒருவர், தன்னுடைய குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறேன். எனவே சாலைமறியல் போராட்டதை கைவிடுங்கள்’ என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் வேண்டுகோள் விடுத்தார்.
உடனே டாக்டர் தமிழிசை சவுந்தராஜன், ‘அந்த பெண் மட்டும் செல்வதற்கு வழி விடுங்கள் என்று சாலைமறியலில் ஈடுபட்டிருந்த பா.ஜ.க. வினரை கேட்டுக்கொண்டார். பின்னர் அந்த பெண்ணுக்கு மட்டும் வழிவிட்டுவிட்டு, சாலைமறியல் போராட்டத்தை பா.ஜ.க. வினர் தொடர்ந்தனர்.
சுமார் அரை மணி நேரம் சாலைமறியல் போராட்டம் நீடித்தது. பின்னர் தங்களுடைய சாலைமறியல் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கக் கூடாது என்பதற்காக தற்போது போராட்டத்தை கைவிடுகிறோம் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வேட்பாளர் கரு.நாகராஜன் ஆகியோர் சந்தித்து, பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் அளித்தனர்.
அப்போது டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டி.டி.வி. தினகரன் அணியினர் வெளிப்படையாகவே பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர். எங்களுடைய கார்களுக்கு பாஸ் வழங்குவதற்கு பல்வேறு கெடுபிடிகளை தேர்தல் ஆணையம் விதித்தது. ஆனால் வெளி மாவட்டத்தை சேர்ந்த பல கார்கள் தொகுதிக்குள் வலம் வருகின்றன.
ஊழல் இல்லாத சூழலில் தேர்தல் நடக்கவில்லை என்றால், தேர்தல் நடத்துவதே வீண். தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.