தாய் கொலை வழக்கில் மும்பையில் கைதான தஷ்வந்த், விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டார்

மும்பையில் கைதான தஷ்வந்த், விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டார்.

Update: 2017-12-09 17:37 GMT
சென்னை,

சிறுமி கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தபோது நகைக்காக பெற்ற தாயை கொலை செய்த தஷ்வந்த், மும்பையில் கைதானபோது போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடினார். அவரை நேற்று போலீசார் மடக்கிப் பிடித்து மீண்டும் கைது செய்தனர். 

தஷ்வந்த் தப்பி ஓடி விட்டதாக தமிழக போலீசார் அளித்த புகாரின்பேரில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் அவரை மீண்டும் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  முன்னதாக தஷ்வந்திற்கு 3 நாள் போலீஸ் காவல் விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில்  இன்று சென்னைக்கு அழைத்து வர போலீசார் முடிவு செய்தனர்.  அதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கைதான தஷ்வந்த், விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டார். தஷ்வந்தை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்