ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் முடிய நேரடி வரி வசூல் ரூ.4.8 லட்சம் கோடி மத்திய அரசு தகவல்

மத்தய அரசு நேரடி மற்றும் மறைமுக வரி என்னும் 2 விதமான வரிகளை வசூலித்து வருகிறது.

Update: 2017-12-09 17:21 GMT
புதுடெல்லி, 

மத்திய அரசு நேரடி மற்றும் மறைமுக வரி என்னும் 2 விதமான வரிகளை வசூலித்து வருகிறது. இதில் நேரடி வரிகள் என்பதில் தனிநபர் மற்றும் கம்பெனிகள் வருமான வரி, சொத்து வரி, பங்கு பரிமாற்ற வரி உள்ளிட்டவை அடங்கும். நேரடி வசூல் தொடர்பான விவரங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

இந்தநிலையில், இந்த நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் முடிய நேரடி வசூல் விவரம் குறித்து நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி இந்த காலகட்டத்தில் நேரடி வரி 4 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டின்(2016–17) இதே காலகட்டத்தில், வசூலானதை விட 14.4 சதவீதம் அதிகம் ஆகும்.

2017–18–ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஒட்டுமொத்த நேரடி வரி வசூல் 9 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை 49 சதவீத வரி வசூல் ஆகி இருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

மேலும் செய்திகள்