ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை குற்றச்சாட்டு
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னை
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜனுடன் தமிழிசை சவுந்தரராஜன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மற்ற கட்சி வேட்பாளர்கள் பரிசுப்பொருட்களுக்காக டோக்கன் கொடுப்பதை தடுக்கவில்லை. ஆர்.கே.நகரில் வெளியாட்களை அனுமதிக்க கூடாது . ஊழல்வாதிகள் தேர்தலில் இருந்து விலக்கப்பட வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை. ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவுக்காக தெருக்களில் கணக்கெடுப்பு நடைபெறுகிறது
வெளி மாவட்டங்களை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டோர் ஆர்.கே.நகரில் தங்கியுள்ளனர். பணப்பட்டுவாடா செய்ய கணக்கெடுக்கும் ஆதாரம் எங்களிடம் உள்ளது. தேர்தல் அதிகாரி வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த வேண்டும் என சவுந்தரராஜன் கூறினார்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் வரும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் கூறினார்.