மீனவர்களை கண்டுபிடிக்க போர்க்கால நடவடிக்கை முதல்-அமைச்சருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்
கடலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சமீபத்தில் ஏற்பட்ட ஒகி புயலால் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத அளவுக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த 30-11-2017 அன்று புயல் ஏற்பட்டு சுமார் ஒருவாரம் கடந்த பின்னரும், மீனவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண பணிகளை வழங்குவது, மருத்துவ முகாம்கள், குடிநீர், உணவு வழங்குவது போன்ற பணிகளை நிறைவேற்றுவதிலும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை.
உடனடியாக மாவட்ட அளவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி நிவாரணங்களுக்கு திட்டமிடுவதுடன், அனைத்து கட்சிகள், அனைத்து மக்கள் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களை இணைத்து நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
கடலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு மாவட்டத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
புயலால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களுக்கு கேரளா அரசு வழங்கியது போல் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மீனவர்கள், விவசாயிகள் வாங்கியுள்ள அரசு கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் இதரர் தங்கள் முறையீடு மனுக்களை அந்தந்த கிராம அலுவலகங்களில் பெறவசதி செய்து கொடுக்க வேண்டும். அங்கிருந்து துறைவாரியாக பிரித்து கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம், அதிநவீன விசைபடகு வசதி திட்டத்தை விரைந்து அமலாக்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.