தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால், தினகரனுக்கு "தொப்பி" சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை

ஆர்.கே நகர்இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால், தினகரனுக்கு "தொப்பி" சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை என தெரியவந்து உள்ளது

Update: 2017-12-07 11:53 GMT
சென்னை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது.  சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற உள்ளதால், தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திற்கு தினகரன் வருகை தந்துள்ளார்.

டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு .ஏற்கனவே 29 பேர் தொப்பி சின்னத்தை கோரி இருந்தனர். இதில் பதிவு பெற்ற இரண்டு கட்சிகளும் அடங்கும்  ஆர்.கே. தொகுதியில் பதிவு செய்த இரு கட்சிகள் தொப்பி சின்னத்தை கேட்பதால் தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை.

நமது கொங்கு முன்னேற்ற கழகம், தேசிய மக்கள் சக்தி கட்சி ஆகியவை தொப்பி சின்னத்தை கேட்கின்றன. இதனால் தொப்பி சின்னம்  பதிவு பெற்ற இரண்டு கட்சிகளுக்கு குலுக்கல் முறையில் வழங்கப்பட உள்ளது.

பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு குலுக்கல் முறையில் தொப்பி சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

மேலும் செய்திகள்