ஆர்.கே. நகரில் இன்னும் 5,117 போலி வாக்காளர்கள்: தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் முறையீடு

ஆர்.கே. நகரில் இன்னும் 5,117 போலி வாக்காளர்கள் உள்ளனர் என தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் முறையீடு செய்துள்ளார்.

Update: 2017-12-06 05:32 GMT

சென்னை,

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான ஓட்டு பதிவு வருகிற 21ந்தேதி நடைபெறுகிறது.  இந்த தேர்தலில் ஆளும் அ.தி.மு.க., எதிர்க்கட்சியான தி.மு.க., பாரதீய ஜனதா மற்றும் சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் ஆர்.கே. நகரில் இன்னும் 5,117 போலி வாக்காளர்கள் உள்ளனர் என குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.  இதுபற்றி அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவை வேறு அமர்வு விசாரிக்கும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெறும்.

மேலும் செய்திகள்