நாகையில் கடற்சீற்றம்: 54 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை; 6,500 படகுகள் கரையில் நிறுத்தம்

நாகையில் கடற்சீற்றத்தினால் 54 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

Update: 2017-12-04 02:57 GMT

நாகை,

வங்க கடலில் புதிய புயல் உருவாகி உள்ள நிலையில் கடலோர பகுதிகளில் புயற்காற்று வேகமுடன் வீச கூடும்.  புயல் கரையை கடந்து செல்லும்பொழுது கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.  கடல் சீற்றமுடன் இருக்கும் சூழலில் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும் நேற்று எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், நாகையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.  இதனால் 54 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.  தொடர்ந்து 1,500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 5,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

இதேபோன்று காஞ்சிபுரத்தில் கல்பாக்கம், மாமல்லபுரம், உய்யாலிகுப்பம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.  புதுக்கோட்டையில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தவிர்த்தனர்.

கடற்காற்று 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்தில் வீசும் என்ற எச்சரிக்கையை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

மேலும் செய்திகள்