உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர், சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு பாராட்டு
உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர் மற்றும் சிகிச்சை அளித்த டாக்டர்களை, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்தி பரிசுகளை வழங்கினார்.
சென்னை,
சென்னை கலைவாணர் அரங்கத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர் மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவ நிபுணர்கள், செவிலியர்களை கவுரவித்தல் நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:-
மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிக அளவிலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
இந்த திட்டம் துவக்கப்பட்டதிலிருந்து இதுவரை ஆயிரத்து 56 இறந்த கொடையாளர்களிடம் இருந்து 5 ஆயிரத்து 933 முக்கிய உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிறுநீரகம், இருதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இருதய வால்வுகள் போன்ற மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்ய 70 மருத்துவமனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில் மிகச்சிறப்பாக செயல்பட்டதற்காக, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நாட்டிலேயே முதல் மாநிலத்திற்கான தேசிய விருதுகளை தமிழ்நாடு வென்றுள்ளது. தொடர்ந்து இவ்வாண்டும் தமிழ்நாடு முதல் மாநிலம் என்ற தேசிய விருதை பெற்று ஹாட் டிரிக் சாதனை படைக்கும்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் எந்த செலவும் இன்றி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இது தவிர, அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் தேவைப்படும் விலை அதிகமான ‘இம்யுனோ சப்ரசிவ்’ மருந்துகள் கூட கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.
நாம் மானிடப் பிறப்பு எடுத்ததன் பயன் மற்றவர்களுக்கு உதவுவதே ஆகும். எல்லோரும் கொடையாளிகள் ஆகிவிட்டால், இப்பூவுலகமே சொர்க்கலோகம் ஆகிவிடும். இக்கூற்றுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் செயல்பட்டு ஆயிரத்து 56 மூளை சாவு அடைந்த தங்கள் உறவினர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்து, மற்றவர்களின் உயிர்களை காப்பாற்ற காரணமாக இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அரசின் சார்பாகவும், எனது சார்பாகவும் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை உரையாற்றினார். மாற்று உறுப்பு சிகிச்சை தொடர்பான நோட்டா அமைப்பின் இயக்குனர் விமல் பண்டாரி வாழ்த்துரை வழங்கினார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது உரையில், “இந்திய முழுவதிலும் 10 லட்சம் நோயாளிகள் உடலுறுப்பு தானத்திற்காக காத்திருக்கின்றனர். 2 லட்சத்திற்கும் மேலான சிறுநீரக உறுப்பு தேவைப்படும் நிலையில், 6 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது. அதேபோல இருதயம், கல்லீரல் ஆகியவற்றின் தேவையும் அதிகமாக உள்ளது. ஆனால் அவற்றின் இருப்பு குறைவுதான்” என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, டிரான்ஸ்டான் உறுப்பினர் செயலாளர் டாக்டர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை, திருச்சி கே.ஏ.பி.விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை; கே.எம்.செரியன், முகமது ரேலா, குமுதா லிங்கராஜ் உள்பட 20 டாக்டர்கள், நர்சுகள், ஒருங்கிணைந்து உதவி செய்த ஆஸ்பத்திரி ஊழியர்கள், உறுப்புகளை கொண்டு வருவதற்காக சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்திருந்த டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், ஆம்புலஸ் சேவைப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர் மகேஸ்வரன் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசளித்து வாழ்த்தினார்.
மூளைச்சாவு அடைந்து உறுப்புகள் எடுக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள் வந்து பரிசை பெற்றபோது அரங்கில் இருந்த அனைவரும் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்தினர்.
சிறுநீரகத்தை தானமாகப் பெற்று அறுவை சிகிச்சை செய்து இயல்பான வாழ்ந்து கொண்டிருக்கும் டாக்டர் அரபாத், தனது அனுபவங்களை எடுத்துரைத்தார்.