பழனிசாமிக்கு திமுக எம்எல்ஏக்கள் சிலரும் கூட ஆதரவாக உள்ளனர் - அமைச்சர் செல்லூர் ராஜூ
முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக எம்எல்ஏக்கள் சிலரும் கூட ஆதரவாக உள்ளனர் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
சென்னை,
பன்னீர்செல்வம் அணிக்கு 111 எம்எல்ஏக்கள் ஆதரவு என தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பில் தெரிவித்த தகவல் குறித்த கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தந்தி டிவிக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
நல்லாட்சி வழங்குவதால், முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக எம்எல்ஏக்கள் சிலரும் கூட ஆதரவாக உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால், திமுக எம்எல்ஏக்கள் சிலரும் முதலமைச்சருக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.