மாநிலத்தின் நலன் கருதியே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்
நாங்கள் யாருக்கும் அடிபணியவில்லை. மாநிலத்தின் நலன் கருதியே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
சென்னையில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- போயஸ்கார்டனில் வருமான வரித்துறை சோதனை பற்றி...
பதில்:- சிங்கம் வாழ்ந்த குகைக்குள் (போயஸ்கார்டன்) சிறுநரிகள் (சசிகலா குடும்பத்தினர்) சென்றதால் வருமான வரித்துறை சோதனை ஏற்பட்டுள்ளது.
எங்களுக்கு தலைவர் என்று சொன்னால் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தான். மற்றவர்களை பற்றி கிஞ்சித்தும் கூட நாங்கள் சிந்திக்கவில்லை. சிந்திக்கவும் மாட்டோம்.
கேள்வி:- ஜெயலலிதா ஊழல் ராணி என்றும், சசிகலா ஊழல் இளவரசி என்றும் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளாரே?
பதில்:- ஜெயலலிதா கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர். ஜெயலலிதாவால் தான் அன்றைக்கு பா.ம.க.வுக்கு மத்திய மந்திரி சபையில் ஒரு அமைச்சர் பதவி கிடைத்தது. டாக்டர் ராமதாஸ், ஜெயலலிதாவை பார்ப்பதற்கு முன்பு பா.ம.க. நிலைமை எப்படி இருந்தது.
ஜெயலலிதாவை பார்த்த பின்பு அவருடைய சொத்து எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே டாக்டர் ராமதாஸ், ஜெயலலிதாவை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர்.
கேள்வி:- தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் கவர்னரிடம் சரணாகதி அடைந்திருப்பதாக புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி கூறியிருக்கிறாரே?
பதில்:- யாருக்கும் நாங்கள் அடிபணியவில்லை. மாநிலத்தின் நலன் என்ற அடிப்படையிலேயே மத்திய அரசுடன் இணக்கமான சூழல் வைத்து இருக்கிறோம். அதை வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுடைய கண்ணில் தான் கோளாறு இருக்கிறது.
கேள்வி:- தமிழக அரசு திவாலாகி விட்டது. எனவே முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளாரே...
பதில்:- நிதி நெருக்கடி இருந்தாலும் கூட ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். எனவே அது என்ன திவால்? என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.