முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்

Update: 2017-11-18 06:03 GMT
மதுரை

இன்று சிவகங்கையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு மதுரை வந்தார்.

பின்னர் இரவு அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுத்த அவர் கட்சி நிர்வாகிகளுடம் பேச்சுவார்த்தை நடத்தினார் . மேலும் ஒரு போக பாசன விவசாயிகளும் முதல்வரைச் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வெளியானது .இன்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த அவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பாக வரவேற்பு அளிககப்பட்டது. பின்னர் சாமி தரிசனம்செய்த முதல்வர், பூரணகும்ப மரியாதையைப் பெற்றுக்கொண்டார்.

அம்மன் சன்னதி, சுந்தரேசுவரர் சன்னதிகளில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தார். அவருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் சென்றனர். முதல்வரின் வருகையையோட்டி மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்