தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது வேதனைக்குரியது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது வேதனைக்குரியது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Update: 2017-11-14 16:31 GMT
சென்னை,

தமிழக மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.  அவர் கூறும்பொழுது, தமிழக மீனவர்கள் கடலோர காவல் படையினரால் தாக்கப்பட்டது பற்றிய உண்மை நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்த சம்பவம் பற்றி மத்திய வெளியுறவு துறைக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் பற்றி இன்று ஆய்வு மேற்கொண்டார்.  அதன்பின் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.  இதுபற்றி பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அரசு நிர்வாகத்தின் தலைவரான ஆளுநர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதில் தவறில்லை என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்