காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வை பொருத்து கனமழை இருக்கும்- சென்னை வானிலை மையம்
தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வை பொருத்து கனமழை இருக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
சென்னை
கடந்தவாரம் தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி மறைந்து புதிதாக தென்கிழக்கு வங்க கடலில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக சென்னை மற்றும் வட கடலோர மாவட் டங்களில் மழை பெய்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று தென் மேற்கு திசையில் நகர்ந்ததால் கடந்த 2 நாட்களாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இடைவிடாமல் பரவலாக மழை பெய்தது.
இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு பகுதியான தென் மேற்கு திசையில் இருந்து வடக்கு நோக்கி மேலும் நகர்ந்து செல்கிறது. இதன் காரணமாக வட கடலோர தமிழ்நாடு, கடலோர ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலைமையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு பரவலாக மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று பகலில் காற்றுடன் பெய்யத் தொடங்கிய மழை இடைஇடையே பலமாக கொட்டியது. விடியவிடிய இடைவிடாமல் மழை நீடித்தது. காலையிலும் மழை தொடர்ந்து பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பகலில் தூறலுடன் பெய்யத் தொடங்கிய மழை இடை இடையே பலமாக கொட்டியது. விடியவிடிய இடை விடாமல் மழை நீடித்தது. காலையிலும் மழை தொடர்ந்தது. அதன்பிறகு பகலில் இருந்து தொடர்ந்து பலமாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மீண்டும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று பள்ளி களுக்கு விடுமுறை அளிக்கப் படவில்லை. இதனால் காலையில் பள்ளிகள் அமைந்துள்ள பகுதி களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை லேசாக தூரிக் கொண்டே இருந்ததால் பள்ளி, அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் அவதிப் பட்டனர்.
சென்னை வானிலை மைய இயக்குனர் பால்சந்த்திரன் இன்று நிருபர்களுக்குபேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது;-
வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வை பொருத்து கனமழை இருக்கும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை 11% குறைவாக பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.