ஒருதலைக்காதலால் ஆதம்பாக்கத்தில் இளம்பெண் எரித்துக்கொலை வாலிபர் கைது
ஒருதலைக்காதலால் ஆதம்பாக்கத்தில் இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யபட்டார் தாய் சகோதரி உயிருக்கு போராடி வருகின்றனர்.
சென்னை
ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். முத்த மகள் இந்துஜா (21),
இந்துஜா பட்டதாரி பெண். இவரை வேளச்சேரியை சேர்ந்த ஆகாஷ் (22) என்ற வாலிபர் காதலித்தார். இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். பள்ளி பருவத்திலேயே இந்த காதல் அரும்பியது. ஆனால் இவர்களது காதலை பெற்றோர் ஏற்கவில்லை. காதலை கைவிடும் படி அறிவுறுத்தினார்கள். இதனால் மனம் மாறிய இந்துஜா காதலை கைவிட் டார். ஆனால் ஆகாஷ் விடுவதாக இல்லை. தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார்.
இதனால் எரிச்சல் அடைந்த இந்துஜா ஆகாஷை கண்டித்தார். நேற்று இரவு 9 மணியளவில் ஆகாஷ் இந்துஜா வீட்டுக்கு சென்றார். அப்போது இந்துஜா, அவரது தாயார், தங்கை, தம்பி அனைவரும் இருந்தனர்.
அவர்களிடம் இந்துஜாவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. கொலை வெறியோடு டர்பன் டைன் ஆயில் கேனுடன் வந்திருந்த ஆகாஷ் அதை இந்துஜா மீது ஊற்றினார்.
அதைப் பார்த்ததும் அனைவரும் அலறினார்கள். யாரையும் வீட்டை விட்டு வெளியே விடாமல் அனைவர் மீதும் டர்பன் டைனை வீசினார். பின்னர் கையில் இருந்த லைட்டரால் தீயை கொளுத்தினார்.
உடலில் தீப்பற்றியதும் அனைவரும் கதறினர். அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்தனர். அதற்குள் இந்துஜா உடல் வெந்து பரி தாபமாக இறந்து போனார்.
உயிருக்கு போராடிய தாய் ரேணுகா, தங்கை நிவேதா ஆகியோரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்துஜாவை எரித்து கொன்றுவிட்டு ஆகாஷ் தப்பி ஓடினார். ஆதம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இளம்பெண் இந்துஜாவை எரித்துக்கொன்ற வழக்கில் தேடப்பட்ட இளைஞர் ஆகாஷ் காவல்நிலையத்தில் சரண்.