சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள் இடங்களில் நடந்த வருமான வரி சோதனை முழுமையாக நிறைவு
சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள் இடங்களில் நடந்த வருமான வரி துறை சோதனை முழுமையாக நிறைவு பெற்றது.
சென்னை,
ஜெயா தொலைக்காட்சி நிறுவனம், நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் கடந்த 9ந்தேதி வருமான வரி சோதனை நடந்தது.
ஜெயா தொலைக்காட்சி நிறுவனம், நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் கடந்த 9ந்தேதி வருமான வரி சோதனை நடந்தது.
முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோன்று சசிகலாவின் உறவினர்களான விவேக், கிருஷ்ணப்ரியா உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.
இந்நிலையில் சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனை முழுமையாக நிறைவு பெற்றுள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.
சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.