”காந்தியின் பெயரைக் கூறக்கூட டிடிவி தினகரனுக்குத் தகுதியில்லை”: கே.பி.முனுசாமி கடும் விமர்சனம்

காந்தியின் பெயரைக் கூறக்கூட டிடிவி தினகரனுக்குத் தகுதியில்லை என்று கே.பி.முனுசாமி கடும் விமர்சனம் செய்தார்.

Update: 2017-11-12 10:26 GMT
கிருஷ்ணகிரி,

சசிகலா மற்றும் தினகரன் உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் ,நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை 4 ஆம் நாளாக பல இடங்களில் நீடித்து வருகிறது. சென்னை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சோதனை நடைபெற்றுவருகிறது.  டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, தான் ஒன்றும் காந்தியின் பேரன் இல்லை எனவும் என் மீது குற்றம் சுமத்துபவர்கள் காந்தியின் பேரன்களா? என்று கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். 

இந்த நிலையில், டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், பேட்டி அளித்துள்ள ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர் கேபி முனுசாமி கூறியிருப்பதாவது:- “ சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடக்கும் வருமான வரி சோதனைகளுக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜெயலலிதாவை ஏமாற்றி பல ஆயிரம் கோடி சொத்துகளை சசிகலா குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். சசிகலா உறவினர்கள் வீடுகளில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்ததாகவும் தகவல்கள் வருகின்றன. காந்தியின் பேரன் இல்லை என்று மட்டும் அல்ல, ’காந்தி’ என்ற பெயரைக் கூறக் கூட டிடிவி-தினகரனுக்கு தகுதியில்லை” எனக் கூறினார்.

மேலும் செய்திகள்