மு.க. ஸ்டாலினின் முதல் அமைச்சர் கனவு கனவாகவே இருக்கும்; அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி
மு.க. ஸ்டாலினின் முதல் அமைச்சர் கனவு கனவாகவே இருக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டாலும், மழை வந்தபோதிலும் ஆட்சி கலைய வேண்டும் என்பதே மு.க. ஸ்டாலினின் நோக்கம் ஆக இருக்கிறது.
முதல் அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு கனவாகவே இருக்கும் என கூறினார்.
ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனை பற்றி பேசிய அவர், கிடைக்கும் தகவல்கள் அடிப்படையிலேயே வருமான வரி சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைக்கும், அரசுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் கூறியுள்ளார்.