அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வருமான வரி சோதனை நடக்கிறது ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சசிகலா, டி.டி.வி.தினகரன், அவர்களது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை நடப்பதாக ஜவாஹிருல்லா குற்றம் சாட்டி உள்ளார்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரத்தில் நேற்று மாலை காஞ்சீபுரம் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அதன் தலைவர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டார். இதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் யாக்கூப் தலைமை தாங்கினார்.
கூட்டம் முடிவடைந்ததும் செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறியதாவது:-
அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந் தேதியை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிக்க இருக்கிறது. அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். சென்னை மாவட்டத்தில் வள்ளுவர் கோட்டத்தில் இந்த போராட்டம் நடைபெற இருக்கிறது.
தற்போது சசிகலா, டி.டி.வி.தினகரன் வீடுகளில் நடக்கக்கூடிய சோதனையில் ஷெல் நிறுவனங்கள் என்று சொல்லக்கூடிய போலி நிறுவனங்களை கண்டுபிடித்ததாக கூறுகின்றனர். ஆனால், குஜராத் பா.ஜனதா முதல்-மந்திரியே இதேபோன்று போலி நிறுவனங்கள், போலி பங்குச்சந்தை மதிப்பு எல்லாம் செய்து இருக்கிறார் என்று அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. எனவே ஊழலை பற்றி பேச பா.ஜனதாவுக்கு அருகதை இல்லை.
மோடி பிரதமர் ஆனபிறகு 2014 நவம்பர் மாதம் சகாரா நிறுவனத்தில் நடந்த வருமானவரி சோதனையில் 137 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதுடன், பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களில் குஜராத் முதல்-மந்திரிக்கு ரூ.40 கோடி, மத்திய பிரதேச பா.ஜனதா முதல்-மந்திரிக்கு ரூ.10 கோடி, சத்தீஷ்கார் பா.ஜனதா முதல்-மந்திரிக்கு ரூ.4 கோடி கொடுக்கப்பட்டதாக எழுதப்பட்டு இருந்தது. அதற்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது.
சேகர் ரெட்டியின் வீட்டில் ரூ.33 கோடி புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் தான் பா.ஜனதாவின் ஊழல் ஒழிப்பு இருக்கிறது.
எனவே முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் சசிகலா, டி.டி.வி.தினகரன், அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்படுகிறது. இதனை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.