நீராவுக்கு அரசாணை வெளியிட வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

நீராவுக்கு அரசாணை வெளியிட வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2017-11-09 18:34 GMT
சென்னை, 

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக அரசு தென்னை மரங்களில் இருந்து தென்னம்பால் (நீரா) இறக்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். தற்போது தென்னை விவசாயிகளுக்கு தென்னை சாகுபடியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை தமிழக அரசு கவனத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் நோக்கத்தில் தென்னை விவசாயத்தை மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா, மகாராஷ்டிராவில் நீரா இறக்க அனுமதி வழங்கப்பட்டதால் கடந்த பல வருடங்களாக அங்கே நீரா விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே தென்னை சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அந்த வகையில் தென்னையில் இருந்து நீரா எனும் தென்னம்பால் இறக்க அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்