மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-வைகோ சந்திப்பு

மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-வைகோ இருவரும் சந்தித்து நலம் விசாரித்துக்கொண்டனர்.

Update: 2017-11-07 19:47 GMT
மதுரை,

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து மதுரையில் தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 7.30 மணியளவில் விமானம் மூலம் மதுரை வந்தார்.

முன்னதாக சென்னை செல்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் இருந்தார். அவர் செல்ல இருந்த விமானம் இரவு 8.10 மணிக்கு புறப்பட இருந்தது.

இந்த நிலையில் மதுரை விமான நிலையத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்திருந்ததை அறிந்த உடன், வரவேற்பு அறைக்கு வைகோ விரைந்தார். பின்னர் அங்கு வந்த மு.க.ஸ்டாலினை வைகோ சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர்.

மேலும் செய்திகள்