இதனால் தான் ஜெயலலிதா அமைச்சர்களை பேசாமல் வைத்திருந்தார்!ரகசியம் சொல்லும் விஜயகாந்த்

கமல்ஹாசன் கட்சி தொடங்கினால் வரவேற்பேன் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறினார்.

Update: 2017-11-07 07:23 GMT
சென்னை

மழையால் பாதிக்கப்பட்ட தாம்பரம் பகுதிகள் மற்றும் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியை தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம்  கூறியதாவது:-

கமல்ஹாசன் கட்சி தொடங்கினால் வரவேற்பேன். அரசு நிதியானது மக்களுக்கு ஒதுக்கப்படவில்லை அரசியல்வாதிகளுக்கே ஒதுக்கப்படுகிறது. அமைச்சர்கள் தற்போது மாறி மாறி பேசி வருகிறார்கள், இதனால் தான் ஜெயலலிதா அமைச்சர்களை பேசாமல் வைத்திருந்தார்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்