தமிழக மழை வெள்ள பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் அளிப்பதாக பிரதமர் உறுதி - முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழக மழை வெள்ள பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் அளிப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை
சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி. அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்பட முக்கிய பிரமுகர்கள் வழியனுப்பி வைத்தனர்.
பின்னர் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டாக பேட்டி. அளித்தனர் அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை பிரதமர் கேட்டறிந்தார். மழை வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.1500 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பதாக பிரதமர் உறுதி அளித்தார்.தமிழகத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பிரதமர் மோடி கவனமாக கேட்டறிந்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வடிகால் அமைக்க மத்திய அரசிடம் தோராயமாக நிதி கேட்கப்பட்டது.மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு உதவுவதாக கூறிய பிரதமருக்கு நன்றி.
நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். சட்டப்பேரவைத் தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.