“அனைவருக்கும் வணக்கம், விழாவில் உங்களுடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” தமிழில் பேசி உரையை தொடங்கிய மோடி
தினத்தந்தி பவளவிழாவில் “அனைவருக்கும் வணக்கம், விழாவில் உங்களுடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என பிரதமர் மோடி தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார்.
சென்னை
‘தினத்தந்தி’ பவள விழா சிறப்பு மலரை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
அதன்பின்னர் விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மூத்த தமிழறி ஞர் விருதை ஈரோடு தமிழன்பனுக்கு மோடி வழங்கினார்.
சிறந்த இலக்கிய நூலுக்கான பரிசு ‘இலக்கியத்தின் மேலாண்மை’ என்ற புத்தகத்தை எழுதிய ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்புவுக்கு வழங்கப்பட்டது.
தினத்தந்தி’ பத்திரிகையை சைக்கிளில் சென்று விற்பனை செய்து தொழில் அதிபராக உயர்ந்தமைக்காக வி.ஜி.பி. குழும தலைவர் செவாலியர் வி.ஜி.சந்தோசத்துக்கு சாதனையாளர் விருதை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி பாராட்டினார்.
இதையடுத்து பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அப்போது அவர், “அனைவருக்கும் வணக்கம், விழாவில் உங்களுடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தமிழில் கூறி தனது பேச்சை தொடங்கினார். ‘தினத்தந்தி’ சேவைகளையும், சாதனை களையும் புகழ்ந்து பேசினார்.