தினகரனை சசிகலா நியமித்தது தவறான முடிவு - பண்ருட்டி ராமச்சந்திரன் பரபரப்பு தகவல்
துணைப் பொதுச்செயலாளராக தினகரனை சசிகலா நியமித்தது தவறான முடிவு என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை,
6 மாத அமைதிக்குப் பின் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியார்களிடம் கூறியதாவது:
கட்சியும், ஆட்சியும் இருக்கும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணியில் நான் இருக்கின்றேன். துணைப் பொதுச்செயலாளராக தினகரனை சசிகலா நியமித்தது தவறான முடிவு. ஆட்சியில் நீதிமன்றங்கள் அதிகமாக தலையிடுவது வருத்தம் அளிக்கிறது. மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது தமிழகத்தில் வழக்கமாக நடப்பதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.