வேலூர் ஜோலார்பேட்டையில் சாலையில் கிடந்த ரூ.2 லட்சம் பணம்; போலீசாரிடம் ஒப்படைத்த பூ வியாபாரி

வேலூரின் ஜோலார்பேட்டையில் சாலையில் கிடந்த ரூ.2 லட்சம் பணத்தினை போலீசாரிடம் ஒப்படைத்த பூ வியாபாரியை போலீசார் பாராட்டினர்.

Update: 2017-11-05 03:26 GMT
வேலூர்,

வேலூரின் ஜோலார்பேட்டையில் பூ வியாபாரம் செய்து வந்தவர் முருகன். இவர் சாலையில் கிடந்த ரூ.2 லட்சம் பணத்தினை எடுத்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

அவரது நேர்மையை பாராட்டி போலீசார் அவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு அளித்தனர்.

பூ வியாபாரி முருகனை ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

மேலும் செய்திகள்