சென்னையில் மழை நிவாரண பணியில் போலீசார் மும்முரம் சீருடையுடன் களத்தில் குதித்தனர்

நிவாரண பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வரும் வேளையில், போலீசாரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2017-11-04 22:45 GMT

சென்னை,

சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக களத்தில் குதித்துள்ளார். தினமும் ஒவ்வொரு பகுதியாக சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் இணைந்து போலீஸ் உயர் அதிகாரிகளும் மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். ஆங்காங்கே நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

குளம் போல் தேங்கிய மழைநீரில் உயர் போலீஸ் அதிகாரிகளே காக்கி சீருடையில் இறங்கி சென்று களப்பணி ஆற்றுவதை பார்த்து, போலீசாரும் ஆர்வத்துடன் மழை பாதிப்பு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று கொண்டிதோப்பு, புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்புகளுக்கு சென்று பார்வையிட்டார்.


மேலும் செய்திகள்