மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.2 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும்

தமிழக அரசு தலா ரூ.2 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் ஏ.சி.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2017-11-04 22:15 GMT

சென்னை,

புதிய நீதிக்கட்சி நிறுவனர்–தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களிலும், தென் கடலோர மாவட்டங்களிலும் வாழும் மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடு மற்றும் உடமைகளை மழை வெள்ளத்தில் இழந்து வீதிகளில் தவிக்கும் நிலைமையில் உள்ளனர். நடுத்தர பிரிவு மக்கள் வசிக்கும் வீடுகளிலும் மழை நீர் புகுந்து, பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இருக்க இடம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு, தங்குவதற்கு இட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

மழை விட்ட பிறகு, தங்கள் இயல்பு வாழ்க்கையை தொடங்க, ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவித்தொகையாக குடும்பம் ஒன்றிற்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் தமிழக அரசு வழங்க வேண்டும். மேலும் இனி வரும் காலங்களில் பெரும் மழை பெய்தால், மக்கள் வெள்ள நீரால் பாதிக்காத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்