மெர்சலை வைத்து அரசியல்: தமிழிசை பேட்டி
மெர்சல் திரைப்படத்தினை வைத்து பலர் மோசமான அரசியலை செய்கின்றனர் என பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை,
விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடி கொண்டுள்ளது. இது மருத்துவ துறையில் நடக்கும் தவறுகளை மையமாக வைத்து வெளிவந்துள்ளது. விஜய் ஐந்து ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். வசூலிலும் இந்த படம் சாதனை நிகழ்த்தி வருகிறது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. வரி பற்றிய வசனத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அத்துடன் டாக்டர்களும் தங்களை அவதூறு செய்வது போன்ற காட்சிகள் வைத்து இருப்பதாக கண்டித்து வருகிறார்கள்.
ஜி.எஸ்.டி. வசனத்தை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியினர் வற்புறுத்தி உள்ளனர். படத்தில் விஜய் பேசும் சர்ச்சைக்குரிய வசனங்கள் மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆட்சியை விமர்சிப்பதாக உள்ளது என்று அந்த கட்சியினர் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார்கள்.
நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் வழியே ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதேபோன்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சு, கருத்து சுதந்திரத்திற்கு தங்களது கட்சி துணை நிற்கும் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, மெர்சல் திரைப்படத்தினை வைத்து பலர் மோசமான அரசியலை செய்கின்றனர்.
கார்த்தி சிதம்பரத்தின் மீது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த 2 மாணவிகள் கைது செய்யப்பட்டு இருந்தனர். ஆனால், மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு இருந்ததை எதிர்த்தே நான் கருத்து தெரிவித்து உள்ளேன் என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி இருக்கும் வரை 120 கோடி மக்களும் கவலைப்பட தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.