ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது சுற்றுலா வேன் மோதல்; 15 பேர் காயம்

ராமநாதபுரம் அருகே சுற்றுலா வேன் விபத்தில் சிக்கியது. இதில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Update: 2017-10-21 11:46 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே நரிப்பாலம் பகுதியில் சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.  அது அரசு பேருந்து  ஒன்றின் மீது திடீரென மோதியது.

இந்த சம்பவத்தில் வேனில் பயணம் செய்த 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மதுரை மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்