எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை குறித்த புகைப்பட கண்காட்சி வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்
சென்னையில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.
சென்னை,
கர்நாடக இசை கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இதன் ஒரு அங்கமாக எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு குறித்த கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் நேற்று நடந்தது.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கண்காட்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அரிய கருப்பு-வெள்ளை புகைப் படங்கள் மற்றும் அதன் அருகில் வைக்கப்பட்டிருந்த விளக்க குறிப்புகளையும் அவர் பார்வையிட்டார். எம்.எஸ். சுப்புலட்சுமி பயன்படுத்திய தம்புரா, வீணை உள்ளிட்ட கருவிகளும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் குறும்படம் மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை-பாடல்களை கேட்பதற்கு பிரத்யேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக ‘குறை ஒன்றும் இல்லை-எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை வாழ்க்கை’ என்ற புத்தகத்தை வெளியிட்டு வெங்கையா நாயுடு பேசியதாவது:-
எம்.எஸ்.சுப்புலட்சுமி இந்தியாவில் மட்டும் அல்ல, உலக அளவில் பிரபலமானவர். பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசை கலைஞர் அவர் தான். ரமோன் மகசேசே விருது பெற்றிருப்பதோடு, ஐக்கிய நாடுகள் சபையில் பாடிய முதல் இந்தியரும் அவர் தான். அவர் ஐ.நா. சபையில் பாடியபோது, அனைத்து நாடுகளும் ஒற்றுமையாக நின்றன. எம்.எஸ். சுப்புலட்சுமி இந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்பட்டார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு பிறந்தநாள் விழா வினையொட்டி, மத்திய அரசு நாணயம் வெளியிட்டு கவுரவித்துள்ளது. சென்னையில் கர்நாடக இசைக்கு பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. இசை மேதைகளாலும் பாராட்டப்பட்டவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. அவரின் சாதனையை பார்த்தோ, கேட்டோ சாதிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு, 10 பேர் இசை ஞானம் பெற்றாலே அது வெற்றி தான்.
நான் தற்போது அரசியலில் இல்லை. இதனால் எனக்கு எந்த டென்சனும் இல்லை. அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வாழ்க்கையில் இன்னும் களைப்படையவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், லலித் கலா அகாடமியின் நிர்வாகி கிருஷ்ணா ஷெட்டி, எம்.எஸ்.சுப்புலட்மியின் பேரன் ஸ்ரீனிவாசன், பேத்திகள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை 30-ந் தேதி வரை பார்வையிடலாம்.